வெள்ளி, 14 மார்ச், 2014

தமிழர் மருத்துவம்,

வயிறு தொடர்பான வலி நீங்க:-
Ø  மிளகை எண்ணெயில் மிதமாக வறுத்து சீரகம், உப்பு  சேர்த்து தூள் செய்து சுடுசோற்றில் பிசைந்து இரவு சாப்பிட வேண்டும்.
ஆசுத்துமா, மூச்சு திணறல் குணமாக:-
Ø  முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
வயிற்று உப்புசம், பேதி தீர:-
Ø  சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடியாக்கி கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கிராம்பு சேர்த்து தயிருடன் கலந்து குடிக்க வேண்டும்.
பித்த வெடிப்பு நீங்க:-
Ø  வேப்பிலை, மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணெயில் கலந்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
அசீரணம் சரியாக () சீரண சக்தி உண்டாக:-
Ø  அகத்திக்கீரையில் சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கின்றன. மூளைக் கோளாறு சரியாகும். சீரண சக்தி உண்டாகும். உடலுக்கு நல்ல சக்தியைத் தரும்.

Ø  ஒரு குவளை தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடிக்க அசீரணம் சரியாகிவிடும்.

1 கருத்து: