வயிறு தொடர்பான வலி நீங்க:-
Ø
மிளகை
எண்ணெயில் மிதமாக வறுத்து சீரகம்,
உப்பு சேர்த்து
தூள் செய்து சுடுசோற்றில் பிசைந்து
இரவு சாப்பிட வேண்டும்.
ஆசுத்துமா,
மூச்சு திணறல் குணமாக:-
Ø
முசுமுசுக்கை
இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய்
விட்டு வதக்கி பகல் உணவில்
சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
வயிற்று
உப்புசம், பேதி தீர:-
Ø
சீரகம்,
கருஞ்சீரகம் இரண்டையும் பொடியாக்கி கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கிராம்பு சேர்த்து
தயிருடன் கலந்து குடிக்க வேண்டும்.
பித்த வெடிப்பு நீங்க:-
Ø
வேப்பிலை,
மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு
சேர்த்து விளக்கெண்ணெயில் கலந்து பித்த வெடிப்பு
உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில்
குணமாகும்.
அசீரணம்
சரியாக (அ) சீரண சக்தி
உண்டாக:-
Ø
அகத்திக்கீரையில்
சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கின்றன.
மூளைக் கோளாறு சரியாகும். சீரண
சக்தி உண்டாகும். உடலுக்கு நல்ல சக்தியைத் தரும்.
Ø
ஒரு
குவளை தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும்
போட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்து
வடிகட்டி குடிக்க அசீரணம் சரியாகிவிடும்.